திங்கள் ,மார்ச்,2, 2015

தலையங்கங்கள்

பழந்தமிழகம் - நா. மகாலிங்கம்

கட்டுரைகள்

தமிழ்த் தொண்டாற்றிய எல்லீசர் - ப. சோமசுந்தர வேலாயுதம் | வள்ளலார் இல்லம் பொதுமையாகட்டும்! - பழ. நெடுமாறன் தலைவர், உலகத்தமிழர் பேரமைப்பு | அமெரிக்காவில் இப்படி ஒரு தமிழ்ப் பெண் - - சிபி. | திருச்சியில் செண்பகத்தமிழ் அரங்கு - முனைவர் ப. சுப்பிரமணியன் | கம்பன் கழகங்களின் – தோற்றமும் வளர்ச்சியும் – 8 - நா. நஞ்சுண்டன், | கிரேக்கக் கலை மரபு – 8 - ஸ்டாலின் | அர்த்தமுடன் அறுபது கொண்டாடுக! - முனைவர் ந.இரா. சென்னியப்பன் | ஆச்சரியம்! ஆனால் உண்மை -  | ஐந்தும் ஐயாறனும்! - தமிழ்க்கீரன் | அரவிந்தரின் ஆன்மிகம்! - மு. பழனி இராகுலதாசன்

விவாதங்கள்

காதலர் தினம்! - - பி.சி.

நேர்காணல்

மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்காக… -

ஆன்மிகங்கள்

காண்போரைக் கவரும் காளையார் கோவில் - என்.ஆர். ஜெயசந்திரன்

ராசி பலன்கள்

இம்மாத ராசிபலன் - ஜோதிடத் திலகம் க. தில்லையம்பலம்

சிறுகதைகள்

ஆத்தா - அய்க்கண் | தொட்டில் குழந்தை - கலைமாமணி விக்கிரமன்

கவிதைக்கள்

சத்தியம் - தங்கமகன் | எடைபோட முடியாத பாடல்கள் - சென்னிமலை தண்டபாணி

விவாதக் கடிதங்கள்

பிப்பரவரி 2015 இதழ் விவாதம் ஜல்லிக்கட்டை ஒழிக்கலாமா…? -

பிறச் செய்திகள்

ஒட்டன்சத்திரம் வட்டார சன்மார்க்கிகளின் புகழஞ்சலி! -  | அருட்செல்வருக்குப் புகழஞ்சலி! -  | பொள்ளாச்சியில் ஒரு விமரிசையான விழா! -  | மிக்சட் ப்ளவர் மில்க் ஷேக் - ர.கிருஷ்ணவேணி, சென்னை.

புத்தக மதிப்பீடுகள்

புத்தக மதிப்பீடு -  | இதிகாசங்களில் போர்க்களங்கள் - - ஆர்.வி.

கழுகாசல புர சாமிகள்

கி. ராஜநாராயணன்

இவரை நாங்கள் இப்பெயரில்தான் எங்களுக்குள் சொல்லிக் கொண்டிருந்தோம். நான் பார்க்கும்போதே அவர் சரியான கிழவர்தான். இடது தோளில் ஒரு கம்பளியை நாலாக மடித்து நீளவசத்தில் போட்டிருப்பார். அதன் மேலே ஒரு கயிற்றில், ஒரு பக்கம் குடிதண்ணீர் கொண்ட செம்பு; அந்தச் செம்பின் பெயர் ராமாநுஜம். மறுபக்க நுனியில் ஒரு சஞ்சி; மடிசஞ்சி! அந்தப் பைதான் அவருடைய செல்வமே. அவர் வணங்கும் பூதேவி சீதேவியுடன் கூடிய ஏழுமலைவாசன், திருமண் பெட்டி, அதோடு சில துணிமணிகள் மற்றும் மான்கொம்புப் பிடி போட்ட ஒரு கம்பரக்கத்தி. அவர் அந்தச் சஞ்சிக்குள் கைவிட்டு அதை எடுக்கும் போதெல்லாம் அவருடைய வாய் அடியேனுக்கு ஸ்ரீகிருஷ்ண ராமாநுஜம் தந்தது என்று சொல்லிக் கொள்வார்.

அந்தச் சஞ்சியை அவிழ்விக்கும் போது துளசி இலையின் வாசமும் கற்பூரத்தின் மணமும் தவறாமல் வீசும்.

அவருடைய உடம்பை, நன்றாக விளைந்து, காய்ந்து வளைந்துபோன சீகைக்காய் வத்தலுக்கு உவமையாகச் சொல்லலாம். தலையின் பின்புறத்தில் ஒரு ரூபாய் அகலத்தில் செம்மறி ஆட்டுவாலின் நீளத்தில் மருந்துக்குக் கொஞ்சம் சிகை இருக்கும். ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் அவன்; தலைக்குச் சிகையை அளந்து வைத்துக் கொண்டவர் இவர்.

இவ்வளவு வயசாகியும் பற்கள் தேய்ந்துதான் போயிருக்கிறதே தவிர ஒன்றுகூட உதிரவில்லை. இன்னொரு அதிசயம், அவருடைய உதடுகள் வறண்டு நான் பார்த்ததில்லை. ஈரம் கசிந்து நிற்கும் எப்போதும்.

வெளியே புறப்பட்டுவிட்டால், முதுகுத் தண்டை மட்டும் மறைக்கும் அளவுக்குச் சுங்குல் விட்டுக் கட்டிக் கொள்ளும் வட்டலேஞ்சு.

வரும் போதே துளசி இலை, பூக்கள் இவற்றைப் பறித்துக் கொண்டுவிடுவார். வீட்டுக்குள் வருவதைப் பார்த்ததும் விழுந்து சேவித்தல்கள், நலம் விசாரிப்புகள் முடிந்ததும் வீட்டினுள் உள்ள தென்னை மரத்தடிக் கிணற்றங்கரைக்குப் போய் திலாவைப் பிடித்து நீர் இறைத்துத் துணி துவைத்துக் குளித்து, கொடியில் காயப் போட்டுவிட்டு…

இப்படி அவர் இயங்கிக் கொண்டிருக்கும் போதே திவ்யப் பிரபந்தப் பாடல்களை முணுமுணுக்கும் ஒலியில் வாய் பாடிக்கொண்டே இருக்கும் வேளையில், இங்கே எங்கள் வீட்டிலுள்ள அம்மாக்கமார்களில் யாரேனும் ஒருவர் கறிகாய்ப் பந்தலில் காய்த்துத் தொங்கும் காய்கறி வகைகளில் ஒன்றிரண்டு பறித்து, அரிசி, பருப்பு, பலசரக்குச் சாமான்களைச் சிறிய வட்டச் சொளகில் தயாராக எடுத்து வைத்துவிடுவார்கள்.

கிணற்றங்கரையை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த தானியக் களஞ்சியக் கட்டடத்தை ஒட்டி சிறிய ஓட்டுச் சாய்ப்பும் அடுப்படியும் அப்பா இவர்களுக்கென்றே ஏற்பாடு செய்திருந்தார்.

அவர்களே வந்து திறந்து முதற் காரியமாகச் சுத்தப்படுத்திக் கொள்வார்கள்; அங்கேயே பெருக்குமார் ஒன்று இருக்கும்.

தரைத் தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைத் தொடாமல் அவர்களே திலாவினால் சேந்திப் பயன்படுத்துவார்கள்.

குளித்துவிட்டுத் தயாராக இருக்கும் சாமிகளுக்குக் கட்டியான நெருப்புத் துண்டங்கள் கொண்டுவந்து தருவார்கள். அவற்றை அவர், தான்புழங்கப் போகும் ஏனங்களுக்குள் போட்டு அக்கினி சுத்தம் செய்து, (பாத்திர சுத்தி, பதார்த்த சுத்தி, பாக சுத்தி, பாகவத சுத்தி என்று) உள்ளே கொண்டு போய்அடுப்புப் பற்றவைத்து அமுது சமைப்பார்.

அவரே ஏற்பாடு செய்து கொண்ட திரையினுள் அவர் செய்கிற காரியங்கள் என்ன என்று எங்கள் மூக்குத் தெரிவித்துக் கொண்டேயிருக்கும். சிறுவர்களாகிய எங்களுக்கு அவரிடத்தில், பார்க்கப் பல அதிசயங்கள் இருந்தன. மோசமான அரிசி, பருப்புகள், சில சமயம் வாடிய கறிகாய்கள், கீரைகள் தந்தாலும் அந்தச் சாப்பாட்டினை எப்படி மணமும் ருசியுமாகத் தர முடிகிறது என்பது.

சில சமயம் குதிரவாலி (சிறிய ஜவ்வரிசி போல உருண்டை உருண்டையான மானாவாரித் தானிய) அரிசியைத் தந்தாலும், அருமையான ருசி கொண்ட சாப்பாடாகச் சமைத்து விடுவார்.

அடுத்து, தனக்கு அவர் இட்டுக் கொள்கிற பன்னிரெண்டு பட்டை நாமங்கள்; மேல் உடம்பு முழுக்க. பின்னொரு சமயம் அவர் வந்திருந்த போது, சமைக்க வரகு அரிசி தந்தாள் பாட்டி. வரகரிசியைப் பார்த்தும் அவருக்குச் சந்தோசம் வந்தது. அப்போது அவர் சொன்ன ஒரு தகவல் இப்பவும் நினைவில் நிற்கிறது. விதைத் தானியங்களைச் சேமித்து வைக்கும் கலசங்களே கோவில் கோபுரத்தின் உச்சியில் வரிசையாக இருக்கும் கோபுரக் கலசங்கள். என்ன வெள்ளம், நெருப்பு அபாயம் வந்தாலும் பாதுகாத்து சம்சாரிகளுக்குத் தந்து விடுமாம் அவை. கோபுரக் கலசங்களுக்கு உள்ளே இருப்பது விதை நவதானியங்கள் என்பது எனக்குப் புதிய செய்தி, அந்த வயசில்.

பனைஓலை இணுக்குகளில் – அவை பச்சையாக இருந்தாலும் காய்ந்து இருந்தாலும் – நகத்தால் பொடீயாகக் கீறி, நெமை தட்டுவதற்குள் நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிற ஒரு சிறிய்ய மான்குட்டியைப் பின்னித் தந்துவிடுவார். ரெண்டு பிள்ளைகள் இருந்தால் ரெண்டு; மூன்று பிள்ளைகள் இருந்தால் மூன்று. அவற்றை நாங்கள் மயில் இறகைப் புத்தகங்களுக்குள் வைத்துக் கொள்வது போல வைத்துக் கொண்டு, வீட்டுக்கு வரும் விருந்தாட்களின் குழந்தைகளுக்குக் காண்பித்துச் சந்தோசப்படுவோம்.

பனைஓலை விசிறி அல்லது தென்னைஓலை விசிறியை அவரே செய்து வீசிக் கொள்வார். அவற்றை எடுத்துக் கொண்டு போகாமல், போகும்போது இங்கேயே போட்டுவிட்டுப் போய்விடுவார்; வச்சிக்கோங்க என்று.

சாப்பாட்டையும் அப்படித்தான்; கொண்டு போவதில்லை. லக்ஷ்மியம்மா, இந்தக் குழந்தைகளுக்கு இதெல்லாத்தையும் எடுத்துக் கொடு என்று கொடுத்துவிட்டுப் போய் விடுவார்.

பழமரமும் கிழவயிறும் தீனியைக் கொண்டா கொண்டா என்று கேட்குமாம் என்று சொல்லுவார்கள். இந்தக் கிழவரோ சாப்பிடுவது ஒரே வேளை; அதுவும் ரொம்பக் கொஞ்சம்!

அவர் எங்களுக்கு வைத்துவிட்டுப் போன அமுது; அதன் மணம் ருசியைப் பற்றி சொல்லிச் சொல்லி வியப்போம். நாங்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகும்கூட அவரும் அவருடைய சமையல் ருசியும் அப்படியேதான் இருந்தது.

சாலைகளில் பேருந்துகள் ஓட ஆரம்பித்த பிறகும் அவர் நடந்தேதான் போய் வந்தார். ஒரே வித்தியாசம் முன்பு சாலையில் நடந்தார்; அதன்பிறகு சாலை ஓரம் நடந்து சென்றார்.

வெயிலில்க் காய்வதும் மழையில் நனைவதும் என்பது இவருக்கும் பொருந்தும்.

ஊரைவிட்டு இறங்கியதும் அவருடைய கண்கள் விடலிப்பனைகளைத் தேடும். கைக்கு எட்டிய பனைவிடலியில் கம்பரகத்தியால் பச்சோலை நறுக்கி எடுத்து, செருப்புப் பின்னிப் போட்டுக் கொண்டு நடப்பார் வெயிலுக்கு.

வெயில் இறங்குவதுக்கும் அந்த ஓலைச் செருப்புகள் தேய்வதற்கும் சரியாக இருக்கும். அப்படியே அதுகளைக் கழற்றி வீசிவிட்டு வெறுங்காலோடு நடப்பார்.

சாலையின் இருபுறமும் பூத்திருக்கும் ஆவாரம் பூக்களைப் பறித்து வைத்துக் கொள்வார், பசியின்போது வாயில் போட்டுக்கொள்ள என்று. ஆவாரைப் பூத்தபின்னே சாவாரைக் கண்டதுண்டோ எனும் சித்தர் வாக்கு ஞாபகத்துக்கு வரும்.

அந்தக் கிராமவாசி தனது ஊரான கழுகாசலபுரத்திலிருந்து ஆண்டுக்கு இரு முறைதான் கிளம்புவார். இடைச்செவலைத் தாண்டுபோதுதான் அவருக்கு இஷ்டமான கிருஷ்ண ராமாநுஜம் திருமாளிகைக்கு வருவார். இவர் மட்டுமல்ல, வைணவபாகவதர்கள் யார் வந்தாலும் எங்கள் ஊர்க்காரர்களிடம் இப்படிச் சொல்லியே விசாரிப்பார்கள். அதனால், எழுத்தாளர் கு. அழகிரிசாமி உற்சாக மனநிலையின்போது எங்கள் வீட்டுக்குள் நுழையும் போது ஸ்ரீகிருஷ்ண ராமாநுஜம் அவர்களின் திருமாளிகை இதுதானா? என்று கேட்டுக் கொண்டே வருவான்!

பின் நாட்களில் நாங்கள் ரசிகமணியிடம் ஈதோ திருநகரி? எனும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கழுகாசலபுரச் சுவாமிகள் நினைவுக்கு வருவார்.

அவர் ஆடிப்பூரத்துக்குச் சீவில்லிபுத்தூருக்கும் வைகாசி விசாகத்துக்கு ஆழ்வார் திருநகரிக்கும், ஆயுள் பரியந்தம் போனார். அப்போதெல்லாம் அவர் தாமிரபரணி ஆற்றங் கரையிலுள்ள திவ்யதேசங்கள், நவதிருப்பதிகள் அனைத்துக்கும் நடந்தே சென்று திரும்புவார்.

வெளியே எங்கேயும் கை நனைப்பதில்லை. ராமாநுஜக் கூடங்களில் பாகவதர்களோடு தங்கிக் கொள்வது, அங்கே அவர்களுக்குப் படைக்கும் அமுதுண்ணும் நேரம் தவிர சதா திவ்யப்பிரபந்தப் பாடல்களைச் சேவிப்பது, பொழுதுகள் சொர்க்கமாக நகரும்; மனதினுள் ஆனந்தம் பிரவாகமெடுத்து ஓடிக் கொண்டேயிருக்கும்.

இப்படியான ஒரு நாள். அந்திப்பொழுது, சீவில்லிபுத்தூரில் வைத்துத்தான் அந்த நிகழ்வு நடந்ததாம.

அந்த நிகழ்வை எங்களுக்குச் சொன்ன பாகவதசாமி எங்கள் வீட்டுக்கு வருவதற்கு முன், ஒரு நாள் சித்திரா பவுர்ணமி. முற்றத்தில் கட்டில்களைப் போட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம் எனது அப்பாப் பாட்டியோடு.

நான்தான் கேட்டேன் பாட்டியிடம் : ரொம்ப நாளாக நம்ம வீட்டுக்குக் கழுகாசலபுர சாமிகளைக் காணோமே பாட்டி?
இன்னுமா இருப்பார் அவர்; திருநாடு போய்ச் சேர்ந்திருப்பார் என்றாள். அதன் பிறகுதான் இந்தப் பாகவதசாமியிடம் அவரைப் பற்றி நான் விசாரித்தது.

அவர் பெயரைக் கேட்டதும் இவர் பரவசமானார். பிறகு, அதைச் சொல்லணும் என்று இரண்டுமுறை சொல்லி, இந்தக் கண்ணால் அதைக் கண்டேன் என்றார்.

பூனங்குளம் சாமிகள் என்று ஆரம்பித்தார்! பூனங்குளமா?
ஆமா; அப்படித்தாம் நாங்க அவரைச் சொல்லுகிறது. அது அவருடைய பூர்வீக ஊராக இருக்கலாம்.

அன்றைக்குச் சனிக்கிழமை; பஜனைக் கூடத்தில் பாகவதர்களெல்லாம் வந்திருந்தார்கள். தொடங்கியது.

சுருதிப் பெட்டியிலிருந்து சுருதி புறப்பட்டு வந்தது. அது பெருகப் பெருக எல்லோரும் அதில் மூழ்கினார்கள். தொம் என்றது மத்தளம்; தயார் என்பது போல் சுவாமிகள் எழுந்து நின்றார். சுங்குல்விட்டுக் கட்டிய வட்ட லேஞ்சி. வலது கையில் துந்தனா. இடது கையில் சிப்ளாக்கட்டை. உருமால்த் துணியினால் இடுப்பை இறுக்கிக் கட்டியிருந்தார், அந்த நோஞ்சான் இடுப்பில். கால்களில் சலங்கைகள்.

உள் வட்டத்தினுள் வந்து நின்ற சுவாமிகள், தாளத் தொடக்கத்தினைத் தெரிவிக்கப் பாதத்தால் தட்டினார். சுருதியோடு துந்தனாவும் இணைந்தது.

அரங்கா உன் நாமம்… என்று பாடல் தொடங்கியது சேர்ந்திசையாக. காது நிறைந்து கேட்டது சுருதியும் லயமும்.

அந்த ஒல்லியான சரீரத்திலிருந்தா இந்த நாதம் எழுகிறது…! சீவில்லிபுத்தூர்த் தெருக்களிலெல்லாம் ஆண்டாள் ரங்கனைத் தேடி ஓடுகிறாள். ரங்கா ரங்கா என்று அலறுகிறாள். ஓட்டம் விளம்பத்தில் தொடங்கி மத்திமம், துரிதம், அதிதுரிதம் என்று குரல் ஓங்கி, உச்சத்தில் ஒலித்தது. அனைவரும் எழுந்து ஆண்டாளோடு சேர்ந்து ஓடத் தயாரானபோது சாமிகள் தடுமாறி விழுந்தார் தாளம் தப்பாமல்.

என்னது என்று அனைவரும் உட்கார்ந்தார்கள். துளசி தீர்த்தத்தை அவர் முகத்தில் தெளித்து சிறிது திறந்திருந்த திருவாயிலும் ஊற்றினார்கள். நின்றுவிட்ட நாக்கு ஏற்றுக் கொள்ளவில்லை; உயிர் பேருயிரோடு கலந்துவிட்டது, ரங்கனோடு அய்க்கியமாகிவிட்டாள் ஆண்டாள் என்று முடித்தார் அந்தப் பாகவதர்.

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, நான் கழுகாசலபுர கிராமத்துக்குப் போக வேண்டியது ஏற்பட்டது!

இது என்ன ஊர் என்று தெரியாமல் விசாரித்த போதுதான் சொன்னார்கள் இந்த ஊர் இது என்று. சைக்கிள் கேரியரில் இருந்து இறங்கினேன். என்ன? என்று என் கூட வந்தவர் கேட்டபோது, இங்கே ஒருத்தர் வீட்டுக்குப் போகணுமே என்றேன். அப்பொ நாங்க திரும்புபோது உங்களை வந்து பார்த்துக் கூட்டீட்டுப் போறோம் என்று போய்விட்டார்கள்.

அந்த ஊர் மண்ணில் கால் ஊன்றியதும் திரும்பவும் ரசிகமணி சொல்லிய பாடலே நினைவுக்கு வந்தது!

ஈதோ திரு நகரி…

ஈதோ பரமபதத்து எல்லை…

சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தேன். குறுமலையின் தெற்குக் கடேசி எல்லையில் அந்த ஊர் அமைந்திருந்தது. தங்கு தடையில்லாமல் தென்னல்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்து ஒருவர் வந்தார். உயரம் கம்மியான உருவத்தில் கோலிக்காய் அளவு கொண்டையுடன், துடைத்து வெகு நாட்கள் ஆன மூக்குக் கண்ணாடியுடன்; சாயம் குறைந்த போர்வை போல உள்ள மேல் வேட்டியுடன்.

ஆர் வீட்டுக்கு வந்திருக்கீஹெ? கேட்டார்.

சொன்னேன். அவருடைய கண்கள் புருவத்தோடு உயர்ந்தன. அவருக்கு மட்டும் கேட்கும்படியாக அய்யொ என்று சொல்லிக் கொண்டு, முகம் இடதும் வலதும் திருப்பி அவுக வீட்டுல யாரும் இல்லையே என்று சொல்லிவிட்டு எனது கையைப் பிடிக்காத குறையாக, வாங்க; நீங்க வாங்க என்று கூட்டிக் கொண்டு போய் அந்தப் பக்க ஊர்களின் வழக்கப்படி ஒரு கடையில் ஒரு சோடாக் கலர் வாங்கி உடைத்துக் குடிங்க குடிங்க என்று குடிக்கச் சொன்னார்.

அந்தக் கலர் எனக்கு ருசிக்கவில்லை; அவருடைய பிரியம் எனக்கு ருசித்தது. பின்னாளில் என்னோடு பழகப் போகும் ரெட்டைக்குளம் ராஜகோபால நாயக்கர் அவர் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. (அந்தக் கதை இப்பொ வேண்டாம்.)

அவர், யாரையோ பார்த்து டே சிவனே இங்கெ வா என்று குரல் கொடுத்ததும் ஒரு வளர்ந்த பையன் ஓடி வந்தான். அவன் கையில் ஒரு மாடு மேய்க்கும் கம்பு இருந்தது.

என்னைக் காட்டி, இவரைக் கூட்டீட்டுப் போய் அந்தச் சாமியார் இருந்த வீட்டைக் காமிச்சிக் கூட்டீட்டு வா என்றார்.

அவனுக்குப் பின்னால் நடந்தேன். அந்த வீடு, ஊரின் தென்கிழக்கு மூலையில் ஒரு ஓரமாக, வெகு நாட்களுக்கு முன் கட்டப்பட்ட கூரை மண் வீடு. அந்த மண்கூரை வீட்டின் அருகில் செழிப்பாய் வளர்ந்து உயர்ந்த ஒரு புளியமரம் நின்றிருந்தது. புளியம் போர் நிறத்தில் விரிக்கப்பட்ட பெரிய அகலமான கம்பளி போல புளியம் பூக்கள் தரையில் கொட்டிக் கிடந்தன.

தலைவாசக் கதவு ஒருச் சாய்த்து மூடப்பட்டிருந்தது. கதவில் எப்போதோ போடப்பட்டு அழிந்துபோன திருமண். (சுவாமிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருந்தால் அந்த இடத்தில் சுத்தியல் அரிவாள் இருந்திருக்கும்.)

கதவை உந்நித் திறந்தால் ராகம் பாடும் என்று தெரிந்தது. இடைவழியாகப் பார்த்ததில் மழையில் நனைந்து நனைந்து கெட்டுப் போன ஒரு பெஞ்சு, கூரையிலிருந்து சரிந்து நீண்ட இரண்டு மூங்கில் கம்புகள் இவை தெரிந்தன. ஏன் இவற்றை ஊரார் எடுத்துக் கொண்டு போகாமல் விட்டு வைத்திருந்தார்கள் என்பது ஆச்சரியமே.

கொஞ்சம் தள்ளிவந்து நின்று அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். வீடு என்றால் எத்தனை வித உணர்ச்சிகளையெல்லாம் உட்கொண்டது! எவ்வித உணர்வும் இல்லாமல் அப்படியே ஒரு சமாதி போல நின்று கொண்டிருக்கிறதே.

நாட்கள், வருடங்கள் சென்றால் திடீரென்று ஒரு நாள் மண்ணோடு மண்ணாகிவிடும். நிற்பது இந்தப் புளியமரம் ஒன்றுதான்.

ஆழ்வார் திருநகரியில் ஒரு புளியமரம்; கழுகாசல புரத்திலும் ஒரு புளியமரம்.

அவ்வளவுதான்.

ராசி பலன்கள்

இம்மாத ராசிபலன்

ஜோதிடத் திலகம் க. தில்லையம்பலம்

நல்லதைச் சொல்வது ஆன்மிகம் உள்ளதைச் சொல்வது ஜோதிடம் மேஷம் மேஷ ராசி நேயர்களுக்கு மாதத்தின் முற்பாதி சூரியனின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால், தொழில் உத மேலும்

ஆன்மிகங்கள்

காண்போரைக் கவரும் காளையார் கோவில்

என்.ஆர். ஜெயசந்திரன்

சிவகங்கை மாவட்டத் தலைநகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள கானப்பேர் என்று அழைக்கப்பட்ட காளையார் கோவில் அமைந்துள்ளது. அவ்வூர் கி.பி. முதலாம் நூற்றாண் மேலும்
Powered By Indic IME